Wednesday, August 26, 2009

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

ரொம்ப டென்சனா இருக்கீங்களா .... வாங்க கொஞ்சம் சிரிப்போம் ...டென்சன குறைப்போம் .........


பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்:  சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.

பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்....

டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன் .
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..

டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....


பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க...

இனி வீட்ல நடக்குற ஜோக்குங்கள பாருங்கோ

நண்பர் : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
கணவன் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..

 
கணவன் : இன்னையில இருந்து என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் :ஏன் ?
கணவன் : நேத்துதான் என் பொண்டாட்டி மண்டைய போட்டா ...

கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் ...

நண்பர் : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?
கணவன் : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..

தோழி ; உன் புருஷன் தொவைக்கும் போது ஏன் நைட்டி போட்டுக்கராரு?
மனைவி : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்......


என்ன சிரிச்சீங்களா டென்ஷன் கொறஞ்சுதா .......இனி நாளைக்கும் கொஞ்சம் சிரிப்போம் ...
நாளை சந்திப்போமா நேயர்களே ......

3 comments:

  1. //நண்பர் ; நீங்க சொல்ற பேச்ச உங்க பையன் கேக்கறதே இல்லையே ரொம்ப பிடிவாதக்காரனோ ?
    அப்பா : இல்ல அவனுக்கு காது கேக்காது ....//

    நண்பரே

    ஜோக்ஸ் எல்லாம் நன்றாக இருந்தன.

    மேலே இர்ருக்கும் ஒன்றை மட்டும் நீக்கி விட்டால் மற்றவை எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
  2. // மேலே இர்ருக்கும் ஒன்றை மட்டும் நீக்கி விட்டால் மற்றவை எல்லாம் சூப்பர்.//




    உங்களின் பொன்னான கருத்துக்கு நன்றி நண்பரே ...... நீங்கள் சொன்னதை நீக்கி விட்டேன் .. இப்பொழுது பாருங்கள் .......

    ReplyDelete