Sunday, July 26, 2009

காளையின் கண்ணீர்


மனிதாபிமானமுள்ள உள்ளங்களே !
இந்த காளைகளின் கண்களில் உள்ள கண்ணீர் உங்களுக்கு தெரிகிறதா?
பிறந்தது முதல் இன்பத்தையே கண்டறியாத இதன் கண்களில் படிந்திருக்கும் சோகம் உங்களுக்கு புரிகிறதா?

அன்றாடம் நாம் சாலைகளில் காணும் காட்சிதான். தொழில் நுட்பம் பெருகி வந்து கொண்டிருக்கும் இந்த காலத்திலும் இந்த பிராணிகளின் துன்பங்கள் குறையவில்லையே!

இயந்திர தொழில் நுட்பத்தில் இயங்கும் கன ரக வாகனங்களுக்கே இந்த அளவு சுமைதான் ஏற்ற வேண்டும் என்று சட்டம் வகுத்து வைத்து இருக்கும் போது அடித்தால் கூட வலிக்கிறது என்று சொல்ல தெரியாத இந்த அப்பாவி பிராணிகளை வதைப்பது ஏன்?

பிராணிகள் வதை தடை சட்டம் என்று ஏதாவது ஒன்று இதற்காக இருக்கிறதா? அல்லது இதற்கான பிரிவுகளும் தண்டனைகளும் சட்டத்தில் இருந்தும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா?

தாய் மடியில் தனக்காக சுரக்கும் பாலை கூட முழுதாக இந்த காளைகள் குடித்திருக்காது அதையும் நாம் விற்று காசாக்கி விட்டு வெறும் வெற்று மடியை மட்டும் தான் இதற்கு காண்பிக்கிறோம்.
இறந்த பின்பும் தோலை உரித்து விற்று காசாக்கி விடுகிறோம்.

பிறந்தது முதல் இறக்கும் வரையிலும், இறந்த பின்பும் நமக்காகவே உதவுகின்ற இந்த ஜீவன்களுக்கு வாழும் காலத்திலாவது சிறிது நிம்மதியை கொடுக்கலாமே !


இந்த படங்களை பார்க்கும் போது உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் ?
சிலர் ஐயோ பாவம் என்று நினைத்து இருப்பீர்கள், சிலர் யப்பா எப்படி ஓடுகிறது என்று நினைத்து இருப்பீர்கள் .

ஆனால் இந்த விலங்குகளின் பரிதாப நிலையை யாரவது யோசித்து பார்த்தீர்களா?
விழாக்களில் விளையாடுவதற்கு எத்தனையோ விளையாட்டுகள் இருந்தும் விலங்குகளை துன்புறுத்தி விளையாடும் இந்த விளையாட்டுகள் எதற்காக?

மனிதன் மட்டுமே வாழ்வதற்காக படைக்கப்பட்டது அல்ல இந்த உலகம்.
இதை புரிந்து நடந்து கொள்வீர்களா மனிதாபிமானமுள்ள(????) உள்ளங்களே!